Princiya Dixci / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
பின்னவலை யானைகள் சரணாலயத்துக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் 'எமது கிராமம் (Theme Park) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.
மேற்படி கிராமம், சப்ரகமுவ மாகாண சபையின் நிதியொதுக்கீட்டில் 500 இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப காலத்தில் மக்கள் வாழ்ந்த பழைய முறையில் அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
மேற்படி கிராமத்தில் பழைய குடிசை வீடுகள். கம்மல் பட்டறைகள், கைத்தொழில் உற்பத்தி நிலையங்கள், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் மற்றும் கோப்பி கடை என்பன அமைக்கப்பட்டு வருகின்றன.
பின்னவல சரணாலயத்துக்கு உல்லாசப் பிரயாணிகள் பெரும்பாலானோர் வருகை தருவதை மையமாகக் கொண்டே மேற்படி சரணாலயத்தின் அருகில் எமது கிராமம் அமைக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி பின்னவல பிரதேசம் உல்லாச வலயமாக மாற்றியமைக்கப்பட்டு அதனூடாக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இக்கிராமம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் நிறைகுறைகளை சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, பிரதான அமைச்சின் செயலாளர் பீ.எம்.பி.என்.பெலிகம்மன, உதவி செயலாளர்களான எம்.பி.எஸ்.என்.குமாரகே, அநுருந்த பண்டார ஆகியோர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago