Editorial / 2023 ஜூன் 18 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த மூன்று முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
டுபாயில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய், ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என மூவரிடமும் நிதியைப் பெற்றுள்ளார் மோசடிக்கு முகங் கொடுத்தவர்கள் கலகெதர மற்றும் அக்குறணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் மூவரும் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டார். இந்த மூவருக்கும் டுபாய் விசாக்களை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பில் டுபாய் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தேடியறிந்த போது அந்த மூன்று விசாக்களும் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். ஷேன் செனவிரத்ன
26 minute ago
30 minute ago
43 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
43 minute ago
10 Nov 2025