R.Maheshwary / 2022 ஜூலை 25 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கண்டி- தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு இந்த மாதம் 22ஆம் திகதி எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அதனை நுகர்வோருக்கு விநியோகிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இரவு 11.30 மணியளவில் அந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு வருகைத் தந்த தலாத்துஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் வரிசையில் காத்திருந்தவர்கள் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், எரிபொருள் விநியோகிக்கப்பட்டதுடன் அது நிறைவடையும் வரை நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என எரிபொருள் கூட்டுதாபனம் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், தலாத்துஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களை மிரட்டி எரிபொருள் விநியோகத்தை தடுத்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
26 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
3 hours ago
3 hours ago