Janu / 2025 மே 14 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதி, நானுஓயா ரதெல்ல சுற்று வீதியில் புதன்கிழமை (14) மாலை நானுஓயா பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பவுசரின் உள்ளே 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்துள்ளது. எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது அதிலிருந்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச் சென்றனர்.
பின்னர் நானுஓயா பொலிஸார் இதனை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதோடு மூன்று எரிபொருள் பவுசர்கள் வரவழைக்கப்பட்டு அதிலே எஞ்சிய பெற்றோல் மற்றும் டீசலை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பி.கேதீஸ்

20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025