2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

எலும்புகள் முறிவு, காயங்கள் காரணமாகவே ஊடகவியலாளர் மரணமடைந்துள்ளார்

Kogilavani   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பலாங்கொடையிலுள்ள சிறிய உலகமுடிவில் தவறி விழுந்து உயிரிழந்த சிரச தொலைக்காட்சியின் 3D எனிமேஷன் தயாரிப்பாளரான தினுர விஜேசுந்தரவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட எலும்புகள் முறிவு, காயங்கள் காரணமாகவே, ஊடகவியலாளரின் மரணம் சம்பவித்துள்ளதாக, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மடுல்சீமையிலுள்ள சிறிய உலக முடிவை பார்வையிடச் சென்று காணாமற்போன தினுர விஜேசுந்தர, நான்கு தினங்களின் பின்னர், நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X