2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

எல்ல சுற்றுலா விடுதி எரிந்து நாசம்

Janu   / 2025 ஜூலை 13 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கந்தே கும்புர பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் சுற்றுலா விடுதி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் வேகமாக பரவிய தீ  காரணமாக குறித்த சுற்றுலா விடுதி எரிந்துள்ளதுடன் இந்த தீ பரவலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை தீயணைப்புத் துறை, பொலிஸார் மற்றும் காப்பீட்டு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், தியத்தலாவை இராணுவப் படையினரின் ஒரு குழுவும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .