Kogilavani / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.சுரேஸ்குமார்
தெமோதரை எல்லந்த கற்குவாரியை மீண்டும் இயங்கச் செய்யுமாறு வலியுறுத்தி, கற்குவாரியில் பணிப்புரியும் சுமார் 45 குடும்பங்களைச் சேர்ந்த 100 மேற்பட்டத் தொழிலாளர்கள், பண்டாரவளை-பதுளை பிரதான வீதியை வழிமறித்து இன்று (28) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்தக் கற்குவாரியில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பணிப்புரிந்து வருகின்றனர் என்றும் கடந்த ஒரு மாதகாலமாக கற்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டமையால் தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே மீண்டும் கற்குவாரியை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பதுளை-பண்டாரவளை வீதியில் போக்குவத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைத்தந்த எல்ல பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் எஸ்.எம்.என்.குமுதினி, தொழிலாளர்களுடன் கலந்துரையாடியதுடன், விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளதார்.
அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர்.


6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago