R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
ஆசிரியர்- அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு அரசாங்கம் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக தீர்வை பெற்றுதருவதாக அறிவித்தாலும் இதனை எழுத்து மூலம் உறுதிப்படுத்தினால் மாத்திரமே, ஆசிரியர்களின் போராட்டம் நிறைவுபெறும் வாய்ப்பு உள்ளதென, தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்க செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (11)காலை இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,
கடந்த 24 வருடங்களுக்கு மேலாக இந்தப் பிரச்சினையை தொடர்பான எமது கோரிக்கைகளை அரசாங்கம் செவிமெடுத்துள்ள போதிலும் நிலையானதும்,எழுத்து வடிவிலான உத்தரவாதமோ வழங்காது, கடந்த காலங்களை போல வாய்மூலமான உத்தரவாதத்தை வழங்குகின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் உத்தரவாங்களால் போராட்டத்தில் குதிக்க நேரிட்டுள்ளது,
எனவே, எமது சம்பள முரண்பாட்டு பிரச்சினையைத் தீர்க்க அரசு எடுக்கும் தீர்மானத்தை,அல்லது உத்தரவாதத்தை எழுத்து வடிவில் தந்துவிட்டால், தொடர் போராட்டங்களை நிறுத்திக்கொள்ள வாய்ப்பு அமையும் என தமது சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது என்றார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago