Janu / 2025 நவம்பர் 24 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை,ஒக்கம்பிட்டிய நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் வழங்கப்பட்ட ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி 2 முறைக்கு 4 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற ஒருவர் சனிக்கிழமை (22) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஏ.டீ.எம் அட்டையுடைய உரிமையாளர் விவசாய பணிகளுக்காக வாகனமொன்றை குத்தகைக்கு விட்டு, பெற்றுக்கொண்ட பணத்தை கணக்கில் வைப்பிலிட்டு திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது ஏ.டீ.எம் அட்டை தவறி கீழே விழுந்து காணாமல் போயுள்ளது. இந் நிலையில் வங்கி கணக்கைச் சரிபார்த்தபோது, இரண்டு முறை நான்கு லட்சம் ரூபாய் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த நவம்பர் 3 ஆம் திகதி அன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் இது தொடர்பாக வங்கியின் பாதுகாப்பு கேமராக்களை ஆராய்ந்து பார்த்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தரையில் கிடந்த, ஒரு துண்டு காகிதத்தில் பின் எழுதப்பட்ட இரகசிய இலக்கத்துடனான ஏடிஎம் அட்டையை எடுத்ததாகவும் பின்னர் அதனூடாக பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று நீதவானின் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
23 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
38 minute ago