Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
"தோட்ட வீடமைப்புத் திட்டத்தை மட்டும் காட்டி, மலையக மக்களை ஏனைய அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து ஒதுக்கிவைக்கப் பார்க்காதீர்கள். நாட்டின் தொலைநோக்கு கொண்ட அபிவிருத்திச் செயற்பாட்டில் நகரம், கிராமம் போலவே பெருந்தோட்டத் துறையையும் உள்வாங்குங்கள்” என்று, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் போதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
“தோட்ட வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு, 2,677 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், தோட்ட வீடமைப்பு தவிர்ந்த ஏனைய அபிவிருத்தி திட்டங்களில் விசேடமான எந்த ஒரு நிகழ்ச்சித் திட்டமும், தோட்டங்களுக்காக முன்வைக்கப்படவில்லை.
“மிக நீண்ட காலமாக அபிவிருத்தியில் பின்நிற்கும் தோட்டப் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்தப்படாமை, ஒரு பாரிய குறையாகக் காணப்படுகின்றது. குறிப்பாக கல்வி, உயர் கல்வி தொடர்பாக விசேடமாக எந்தவொரு நிகழ்ச்சித்திட்டமும் இல்லை. தோட்டப்புற பாதைகள், தோட்டப் பாதைகள் என ஒதுக்கிவைக்கப்படுகின்றன. இனியும் அவ்வாறு ஒதுக்கி வைக்க முடியாது. தோட்டப் பாதைகள் அனைத்தையும் உள்ளூராட்சிமன்ற சபைகளுக்குரிய, மாகாண சபைகளுக்குரிய மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய பாதைகளாக உள்வாங்கப்பட வேண்டும்.
“தோட்ட வைத்திய சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு தேசிய வைத்தியசாலைகள் தொகுதியுடன் இணைக்கப்பட வேண்டும். தோட்டப்புறங்களுக்கும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி பகிர்ந்து செல்ல வேண்டும்.
“ஆக மொத்தத்தில் இன்று முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் வளப்பகிர்வுகளை செய்கின்ற போது நகரம், கிராமத்திற்கு சமனாக தோட்ட புரங்களும் உள்வாங்கப்பட வேண்டும். அப்போதே நாடு உண்மையான தொலைநோக்குடைய அபிவிருத்தி நிலையை அடைய முடியும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago