2025 மே 05, திங்கட்கிழமை

ஏழு குடும்பங்கள் சுயதனிமையில்

S. Shivany   / 2020 நவம்பர் 18 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நோட்டன் பிரிட்ஜ் மிட்போட் டிவிசனில், கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புபட்ட ஏழு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் சீனி தொழிற்சாலையில் வேலை செய்த ஒருவர், கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு , அறிக்கை வருவதற்கு முன் 16 ஆம் திகதி , நோட்டன் பிரிட்ஜ் மிட்போட்ட தோட்ட வீட்டிற்கு வந்துள்ளார் .

அவ்வாறு வந்த அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து,  அவர் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந் நிலையில், குறித்த நபர் சென்ற வீடுகள், அவர் பயணித்த முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட  ஏழு குடும்பங்கள், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ,   பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X