2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஏழு நாள்களாக தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

தோட்ட முகாமையாளரையும் உதவி முகாமையாளரையும் இடமாற்றுமாறு கோரி, ஹெரான பிளான்டேஷனுக்கு உட்பட்ட மஸ்கெலியா ஒல்டன் தோட்டத்தின் நான்கு பிரிவுகளையும் சேர்ந்த 300க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள், கடந்த 2ஆம் திகதி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தவாரம் இரு தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தால் தாக்கப்பட்ட நிலையில், கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இது தொடர்பில், பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, தோட்ட முகாமையாளரும் உதவியாளரும் கைதுசெய்யப்படுவதற்கு முன்பே பொலிஸின் சரணடைந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே தோட்ட முகாமையாளரையும் உதவி முகாமையாளரையும் வெளியேற்றக் கோரி, மேற்படி மக்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் தோட்ட முகாமையாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, தங்களுக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X