Editorial / 2018 மார்ச் 28 , பி.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர், உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றில், எங்களுடைய தலைமைக்கு துரோகமிழைத்துவிட்டனர்” எனத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “கொழும்பு மாநகர சபையிலும் அவ்வாறே துரோகமிழைப்பார்களாயின், மேயர் பதவியைத் துறந்துவிட்டு, ரோஸி சேனாநாயக்க, வீட்டுக்குச் செல்லவேண்டிய நிலைமை ஏற்படும்” என்றார்.
“119 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபைக்கு, 60 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. எங்களுடைய கட்சியின் 10 உறுப்பினர்கள் அடங்கலாக, 59 பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்” என்றார்.
“ஆகவே, உறுப்பினர் ஒருவரை மேலதிகமாகப் பெற்றுக்கொண்டு, கொழும்பு மாநகர சபையின் மேயராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கின்ற எனது நண்பி, ரோஸி சேனாநாயக்கவின் பதவி நூலிழையில் ஊசலாடிக்
கொண்டிருக்கின்றது” என்றார்.
தலவாக்கலை பிரதேசத்தில், தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பாடசாலை சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஒருமித்த முற்போக்குக் கூட்டணியின் 10 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல், கொழும்பில் மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி, தொடர்ந்தும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்த அவர், “எங்களது 10 உறுப்பினர்களும் ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கினால், கொழும்பு மாநகர சபையில், அவர்களுக்கு மொத்தம் 70 உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதுவே உண்மையான பெரும்பான்மை. இதனை ஐ.தே.கவினர் புரிந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
4 minute ago
22 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
40 minute ago
1 hours ago