Administrator / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள 'நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி மற்றும் மிலேனியம் தொலைநோக்குகள்' என்ற தொனிப்பொருளிலான செயலமர்வில், மலையகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூவர் பங்கேற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ், சர்வதேச விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் பி.பி.சிவப்பிரகாசம், ஆசிய கிராமிய பெண்கள் வலையமைப்பின் செயற்குழு உறுப்பினர் திருமதி. பி.லோகேஸ்வரி ஆகியோரே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கொலம்பிய பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (21) ஆரம்பமான இச்செயலமர்வு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும்.
இலங்கை மக்களின் அபிவிருத்தி, மலையக மக்களின் அபிவிருத்தி நியமங்கள், ஆசிய நாடுகளில் தொழிலாளர் அபிவிருத்தி நியமங்கள், இலக்குகள் தொடர்பில், இதன்போது பி.பி. சிவப்பிரகாசம், ம.திலகராஜ், திருமதி. பி. லோகேஸ்வரி ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago