Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 06 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை தோட்ட பிரிவுக்குட்பட்ட கொண்டக்கலை தோட்ட பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற லொறி விபத்தில் பலத்த காயமடைந்தவர்களில் ஐவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் இருவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 தொழிலாளர்களுடன் கந்தப்பளை நகரில் இருந்து லபுக்கலை பலாக்கொலை பகுதியில் மரக்கறி கொள்வனவு செய்வதற்காக அதி வேகத்துடன் பயணித்திருந்த லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 75 அடி பள்ளத்தாக்கில் புரண்டு விபத்துக்கு உள்ளாகிளது.
விபத்து சம்பவத்தில் 14 அன்றாட தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகி 1990 அம்புலன்ஸ் உதவியுடன்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் ஐவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் கந்தப்பளை பகுதி தோட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு தொடர்ந்தும் தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago