Gavitha / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
அனர்த்த முன்னெச்சரிக்கைக்காக, ஒன்பது ரயில் நிலையங்களில் மழை வீழ்ச்சியின் அளவை அறிவதற்காக, மழைமானி பொறுத்தப்பட்டுள்ளது.
வட்டவளை தொடக்கம் ஹம்பேவெல வரையான ஒன்பது ரயில் நிலையங்களிலே, இன்று (03) அவை பொறுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமார, நுவரெலியா- மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தலைமை அத்தியட்சகர் ரஞ்சித் அழககோன், மத்திய மாகாண ரயில் சேவைக் கட்டுப்பாட்டு நிலைய பிரதான அதிகாரி ஆனந்த கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மழை காலங்களில் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக செயற்படும் நோக்கோடே, மழைமானி பொறுத்தப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026