2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“ஒரு மாயை”

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு என்பது ஒரு  மாயையாக மாறியுள்ளது.  அத்தோடு, தோட்டத் தொழிலாளர்கள்  அடிமைகள் போல வாழ வேண்டிய நிலைமைக்குத் தலைப்பட்டுள்ளார்கள்   என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

 அரசாங்கத்தின் அநீதிகளுக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியால் தலவாக்கலையில்
ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு
அவர் தெரிவித்தார்.  

அவர் மேலும் பேசுகையில்,தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்டு மௌனித்து போயுள்ளார்கள். ஆயிரம் ரூபா சம்பளத்தை தொடர்ந்து, தோட்டங்களில் ஆயிரம் பிரச்சனைகள் இன்று தலை தூக்கியுள்ளன. 

தோட்ட நிர்வாகங்களினால் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் நிலைமை அதிகரித்துள்ளன. தோட்ட அதிகாரிகளால் பெண் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .