Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 18 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருத்தொகை சிகரெட் வகைகளை வைத்திருந்த சந்தேகநபரை, தலவாக்கலைப் பொலிஸார் நேற்று(17) கைது செய்துள்ளனர்.
தலவாக்கலை நகரிலுள்ள பலசரக்கு கடையொன்றை சுற்றிவளைத்து , சோதனையிட்டப்போதே, இந்த 200 வெளிநாட்டு சிகரெட்டுகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சிகரெட்டுக்கள், இலங்கையில் அனுமதிபெற்று விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளுடன் கலந்தே விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கடை உரிமையாளரை, பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் வழக்கு பதிவு செய்து, நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகம தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .