Freelancer / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புளத்கொஹூபிட்டிய, நெலுவக்கன பிரதேசத்தில், 37 வயதான நபரொருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். படுகொலைச் செய்யப்பட்ட நபர், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர் என்றும் பக்கத்து வீட்டாருக்கும் இவருக்கும் இடையில் காணிப் பிரச்சினை இருந்தது என்றும், இதுதொடர்பில் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் 10ஆம் திகதி வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை அவர் சண்டைக்குச் சென்றுள்ளார். அவர் மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்ட போதே, அந்நபர் இறந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
பதில் தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த புளத்கொஹூபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
என்.ஆராச்சி
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago