Editorial / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமத்துக்கு யாத்திரை சென்று வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் உட்பட எட்டுபோர் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
ஒரே குழும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை ஏற்றிக்கொண்டு பயணத்தி முச்சக்கர வண்டி, எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ராவண எல்ல 12 மைல்கல் பகுதியில், வியாழக்கிழமை (14) பிற்பகல் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஒரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது, எதிர் திசையில் வந்த ஒரு காருடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. தாய், தந்தை, ஐந்து குழந்தைகள் மற்றும் காரின் ஓட்டுநர் காயமடைந்தனர்.
குடும்ப உறுப்பினர்களான தந்தை (வயது 45), தாய் (வயது 42), இரண்டு மகள்கள் (வயது 24), (வயது 10), இரண்டு மகன்கள் (வயது 12), மற்றும் (வயது 13), இரண்டு வயது குழந்தை மற்றும் பதுளை ஹன்வெல்ல பகுதியைச் சேர்ந்த காரின் சாரதி ஆகியோர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காம யாத்திரைக்காக ஒரே குடும்பத்தினர் ஓட்டி வந்த முச்சக்கர வண்டியை அதன் தந்தை ஓட்டிச் சென்றார். எல்ல, ராவண, எல்ல 12, மைல்கல் பகுதியில், முன்பாக சென்றுக்கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எல்லவில் இருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற கார் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் கார் பலத்த சேதமடைந்துள்ளன.
14 minute ago
28 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
43 minute ago
1 hours ago