2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஒற்றையடிப் பாதையை செப்பனிடுவதாக உறுதி

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன், குடாகம முஸ்லிம் பள்ளிவாயலுக்கு அருகிலுள்ள ஒற்யைடிப் பாதையை, பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, செப்பனிட்டுத் தருவதாக  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மேற்படி கிராமத்தைச் சேர்ந்த இளைஞரொருவரின் வேண்டுகோளை ஏற்று,  அந்த  கிராமத்துக்கு  நேற்று முன்தினம் விஜயம் மேற்கொண்ட  மாகாணசபை உறுப்பினர், பிரதேச மக்கள்,  பாதை சீரின்மையால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக அறிந்துகொண்டார்.

இதனையடுத்தே, மேற்படிப் பாதையை வெகு விரைவில் புனரமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X