Editorial / 2025 நவம்பர் 24 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரம்புக்கனை-மாவனெல்ல வீதியில் உள்ள தலகொல்ல பகுதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது பெரிய மரம் ஒன்று விழுந்ததில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் மாவனெல்ல அரநாயக்க வீதியில் உள்ள லொல்லேகொட பகுதியைச் சேர்ந்தவர்.
ஒரு தம்பதியினரும் அவர்களது சிறு குழந்தையும் மாவனெல்லையில் இருந்து ரம்புக்கனையில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை மாவனெல்ல திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
முச்சக்கர வண்டியில் பயணித்த சிறு குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு மாவனெல்ல மருத்துவமனையில் அனுமதித்தனர். பெற்றோரைக் காப்பாற்ற பெரும் முயற்சி மேற்கொண்ட குடியிருப்பாளர்கள், சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு பெற்றோரை மருத்துவமனையில் அனுமதித்தனர்
11 minute ago
15 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
20 minute ago
25 minute ago