Gavitha / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், மு.இராமச்சந்திரன்
“தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து, மலையக இளைஞர் - யுவதிகளும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இப்போராட்டம், வேறுவகையில் கொச்சைப்படுத்தப்படலாம். எனவே, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாது, போராட்டத்தின் சக்தியை வெளிக்கொணர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.
‘பேச்சுவார்த்தையின்போது, முதலாளிமார் சம்மேளனம், விடாப்பிடியாக இருந்தது. கம்பனிகள் நிர்ணயித்த 500 ரூபாய் சம்பளத்திலிருந்து, சற்றேனும் கீழிறங்கவில்லை. முதலாளிமார் சம்மேளனத்தின் குரங்குப் பிடிக்கு
இ.தொ.கா இணங்கவில்லை’ என்று மத்திய மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் பி.சக்திவேல் தெரிவித்தார்.
கொட்டகலையிலுள்ள சௌமியமூர்த்தி தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில், நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர்,
தோட்டத் தொழிலாளர்கள், விளையாட்டுக்காகச் சம்பளம் கேட்கவில்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையே கேட்கின்றனர்.
தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படும் அளவுக்கு, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஒருவரும் செயற்பட்டுள்ளார்.
இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் முன்வைத்த ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கையானது, இன்றைய காலத்துக்குத் தேவையான தொகையேயாகும்.
ஆனால், இத்தொகையை கம்பனிகள் ஏற்றுக்கொள்வதற்கு, சில முட்டுக்கட்டையாக உள்ளன என்பது எமக்குத் தெளிவாக புரிகின்றது.
மஸ்கெலியா போராட்டத்துக்கு தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டமையை இதற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். இவ்வாறு சில தொழிற்சங்கவாதிகள் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துச் செயற்பட்டால் தொழிலாளர்களுக்கு எவ்வாறு சம்பளம் கிடைக்கும். இச் செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்’ என்றார்.
தொழிலாளர்களின் பலத்தைப் பயன்படுத்தி, சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பது, இ.தொ.காவின் கொள்கையாகும். விசேட காலங்களில் அதாவது, தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் போன்ற காலங்களில் நிலுவையூடான சம்பளத்தை ஆரம்ப காலத்தில் பெற்றுக்கொடுத்ததை போல் இம்முறையும் நாம் பெற்றுக்கொடுக்க முயலும் வேளையிலும் 19 மாத காலப்பகுதிக்கான நிலுவை சம்பளத்துக்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.
நடப்பது, கம்பனிக்கு எதிரான போராட்டம். நல்லாட்சி அரசாங்கம், கம்பனிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், இவ் அரசாங்கம் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை’ என்றார்.
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago