2025 ஜூலை 05, சனிக்கிழமை

குடும்பஸ்தரை பலிகொண்ட வடிகான்

Sudharshini   / 2015 நவம்பர் 02 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை,  குடுகளை - வத்துகாமம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், அப்பகுதியிலுள்ள வடிகானொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை  (01) மாலை  இடம்பெற்றுள்ளது.

அக்குறணை, உக்கலையைச் சேர்ந்த டீ.ஜீ.ஜயசிங்க என்ற 60 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (01)  மாலை பெய்த கடும் மழை காரணமாக வடிகான்களில் வெள்ள நீர் நிரம்பியிருந்தது. இதனால் அந்த வடிகான்,  கண்களுக்கு தென்படாத நிலையிலேயே காணப்பட்டுள்ளது. இதன்போதே குறித்த குடும்பஸ்தர் அதில் தவறி விழுந்து சுமார் அரை கிலோமீற்றர் தூரம் வரை வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது அவரை மீட்டு  வைத்தியசாலையில்  அனுமதித்த போதும் அதற்கிடையில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .