Administrator / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
புஸ்ஸல்லாவ, ஸ்டெலன்பேர்க் வீடன் தோட்டத்தில் 51 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (16) பகல் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த 50 பெண்களும் தோட்ட கணக்கப்பிள்ளையுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் கடுமையாக குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 7பேர் புஸ்ஸல்லாவ வகுப்பிட்டிய வைத்தியசாலையிலும் 3பேர் கம்பளை மாவட்ட வைத்தியசாலையிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
குறித்த பகுதியில் பாம்பொன்றை, கழுகு பிடிக்க முயற்சித்த போது, குறித்த கழுகின் சிறகு அருகில் இருந்த குளவி கூண்டில் பட்டு கலைந்து வந்து தம்மை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
தேயிலைத் தோட்டங்கள் முறையாக பராமறிக்கப்படாமையினாலே, தேயிலைச் செடிகளுக்கு அடியில் இவ்வாறு குளவிகள் கூடு கட்டுவதாகவும், இதனால் தாம் அடிக்கடி குளவிக்கொட்டுக்கு இலக்காக நேரிடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

8 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
44 minute ago
53 minute ago
1 hours ago