2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கை வைக்காது தா: சுகாதார அலுவலக உதவியாளர்கள் கோஷம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி போதனா வைத்தியசாலையின் சுகாதார அலுவலக உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து,  வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று(10) பகல்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'ஓய்வூதியத்தில் கை வைக்காதே',' எட்டு மணி நேர வேலையை உறுதி செய்', '2016  முதல் சேர்த்துக் கொள்ளும் ஊழியர்களின் ஓய்வூதியத்தை உறுதி செய்', 'வாழ்க்கைச் செலவுச் படியை எமக்கும் பெற்றுத்தர வர்த்தமானி அறிவித்தல் முலம் பிரகடனப்படுத்து',  'அதற்கு ஏற்ப வாழ்க்கை செலவை பெற்றுத் தரவும், தற்போதைய வாழ்க்கை செலவுக் கொடுப்பனவுகளை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடு' போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, சுமார் 1,000 கனிஷ்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .