Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட- கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகளின் போது, ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை போன்று பெருந்தோட்டங்களிலும் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று பெருந்தோட்டங்களில் கால்நடை அபிவிருத்தி, பாற்பண்ணை அபிவிருத்தி என்ற பெயரில், பெருந்தோட்ட காணிகளை குறிவைத்து வேறு குடியேற்றங்களை ஏற்படுத்தி மலையக மக்களின் இருப்பிற்கும் மலையகத்தில் இருக்கும் அமைதியான சூழ்நிலைக்கும் பங்கம் ஏற்படுத்தி பிரச்சனை ஒன்றுக்கு தயாராகிறார்களா? என்று சந்தேகம் ஏற்படுகின்றது.
இதன் ஆரம்பம் தற்பொழுது கண்டி மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என
தெரிவித்த அவர், மேலும் பசறை, பதுளை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களிலும் காணிப்பிரச்சினை பல காலமாகவே தொடர்கின்றது.
இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் பல சந்தர்ப்பங்களில் தன்னால்
கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது, அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கிய ஒரு சிலர் இன்று
மௌனித்து இருக்கின்றார்கள்.
ஆகவே மலையகத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தங்களுடைய இருப்பை
தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .