Editorial / 2018 மார்ச் 28 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
கசிப்பு காய்ச்சியக் குற்றச்சாட்டில், கிராந்துருகோட்டை உடவெவ காட்டில் வைத்து, கடந்த 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இருவருக்கும், தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மஹியங்கனை நீதவான் நீதிமன்ற நீதவான் நாலக்க வீரசிங்க, நேற்று முன்தினம் (27) உத்தரவிட்டார்.
திவுலபெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த எச்.விமலசிறி, ஹேரத் முதியன்சலாகே ஆகிய இருவருக்குமே, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காட்டில், கசிப்பு காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக, கிராந்துருகோட்டை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, கடந்த 25ஆம் திகதி, குறித்தப் பகுதியில் விசேட சோதனையை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, 10 ஆயிரம் லீற்றர் 9,000 மில்லிலீற்றர் கசிப்பு, கோடா, பெரல் போன்றவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago