Princiya Dixci / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ரத்னிலகல பிரதேசத்தில் 55 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த நபரொருவரை, இன்று சனிக்கிழமை (01) தலவாக்கலைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தலவாக்கலை ரத்னிலகலப் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபரின் வீட்டினைச் சோதனை மேற்கொண்டபோதே மேற்குறிப்பிட்டளவு கஞ்சாவைக் கண்டெடுத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago