2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கஞ்சா செடிகளுடன் இருவர் கைது

Freelancer   / 2023 ஜூலை 16 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கொஸ்லாந்தை பகுதியில் விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டு தேடுதலை மேற்கொண்ட போது பயிரிடப்பட்டிருந்த இரு கஞ்சா சேனைகளை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த ஒரு கஞ்சா சேனையில் 4அடி உயரமுள்ள 1120 கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளதுடன் 30 வயதுடைய அமகொல்லாவ கொஸ்லாந்தை பகுதியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அதே பகுதியில் உள்ள பிறிதொரு சேனையில்  3 அடி உயரமுள்ள 2600 கஞ்சா செடிகளை கைப்பற்றிய பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் ஹெட்டிமுள்ள கேகாலை பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்களையும் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X