Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்ப்பிரிவுத் தோட்டத்தில், கஞ்சாவுடன் ஒருவரை, நோர்வூட் பொலிஸார், இன்று (18) காலை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 2 கிராம் 500 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
நோர்வூட் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்பத் தோட்டத்திலுள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்து சோதனைசெய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் குறித்த நபரைக் கைதுசெய்தள்ளனர்.
மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே (வயது 32) இவ்வாறுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபரை நீதிமன்றில ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago