Sudharshini / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்.கு.புஸ்பராஜ்
தலவாக்கலை, லோகி தோட்டத்துக்குட்பட்ட கூமுட் தோட்டத்துக்கு சொந்தமான காணியில் தலவாக்கலை லிந்துலை நகரசபையால் அமைக்கப்பட்டுள்ள 14 கடைத்தொகுதிகளையும் அகற்றுமாறு கோரி, தலாவாக்கலை –நுவரெலியா வீதியில் பொது மக்கள் சனிக்கிழமை (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தோட்டத்துக்கு சொந்தமான காணியின் பெரும் பகுதி ஏற்கெனவே மேல் கொத்மலை திட்டத்துக்காக எடுக்கப்பட்டு விட்டன. தற்போது மீதமிருக்கும் காணிகளையும் தனியாருக்கு வழங்குவதால் தோட்ட மக்கள் பாதிக்கப்படுவர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடம் வினவிய போது, 'அது தொடர்பில் நான் ஏற்கெனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இச்சம்பவம் குறித்து இன்றும் முறைப்பாடு ஒன்றை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளேன்' என தெரிவித்தார்.

9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026