2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கடத்தல் முயற்சி; முகநூல் நண்பருக்கு வலைவீச்சு

Kogilavani   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

நபரொருவரின் கைகள், கால்களைக் கட்டி காரொன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட மூவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், கரவனெல்ல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரையே (வயது 37) மேற்படிக் குழுவினர் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

முகநூல் வாயிலாக நண்பரான ஒருவர், களியாட்ட நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக மேற்படி நபரை அழைத்துள்ளார். 

இந்நிலையில் நண்பரின் அழைப்பை ஏற்று மேற்படி நபர், பலாங்கொடை நகருக்கு அதிகாலை 3 மணியளவில் சென்றுள்ளதுடன், முகநூல் நண்பரின் காரில் ஏறிய போது, குறித்த காரில் இருந்த இருவர் அந்நபரின் கைகள், காலகளை கயிற்றினால் கட்டியுள்ளதுடன் அச்சுறுத்தியுமுள்ளனர்.

தேநீர் அருந்துவதற்காக கரவனெல்ல பகுதியில் காரை நிறுத்தியுள்ள குறித்த குழுவினர், கடத்திச் சென்ற நபரின் கட்டுக்களை அவிழ்த்துள்ளனர். மலசலகூடம் சென்றுவருவதாகக் கூறி மேற்படிக் குழுவினரிடமிருந்து தப்பிய அந்நபர்,

ஆறொன்றில் பாய்ந்து நீந்தி மறு கரையை அடைந்துள்ளார்.
கரையோரத்துக்கு அருகிலிருந்த வீட்டில் தஞ்சம்புகுந்த அந்நபர், தனக்கு நேர்ந்தததைக் கூறியுள்ளதுடன் அந்த வீட்டாரின் உதவியுடன் கரவனெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆற்றில் பாய்ந்ததால் குறித்த நபரின் உடலின் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார்.

முகநூல் விவரங்களை வைத்து கடத்தல் கும்பலை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், கரவனெல்ல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X