2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கடத்திச் செல்லப்பட்ட லொறி மீட்பு; ஒருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை - அலுவிகாரை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் நபரொருவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலுள்ள பாலடைந்த பிரதேசத்திலிருந்து, நேற்று  (15), லொறியை மீட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாவனைக்காக, விகாரை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி காணாமல் போனமை தொடர்பில், பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், தமக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே, லொறியை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .