Editorial / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் பகுதியில், புதன்கிழமை (15) மாலை பெய்த கடுங் காற்றுடன் கூடீய மழை காரணமாக, நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலத்தின் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன என்று, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
வகுப்பறை ஒன்றின் கூரை தகரங்கள் காற்றில் அள்ளுண்டுச் சென்றமையால், தரம் 01 வகுப்பறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, வித்தியாலயத்தின் அலுவலகத்திலுள்ள ஆவணங்கள் சில, மழை நீரில் நழைந்துள்ளன என்று, பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், வலயக் கல்விப் பணிமனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, பாடசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது, மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால், குடியிருப்பு பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணிகள், நோர்வுட் பிரதேச சபையின் உறுப்பினர் ஜேசுரட்ணம் லிகாந்தனின் தலைமையில், இன்று(16) முன்னெடுக்கப்பட்டன.






28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026