2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கடும் மழையால் விவசாயம் பாதிப்பு

Kogilavani   / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக, விவசாயச் செய்கைகள் பெரும் பாதிப்படைந்துள்ளதென, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடும் மழையால், அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்ட பகுதியிலுள்ள ஆற்றுநீர் பெறுக்கெடுத்ததால், அப்பகுதியிலுள்ள விவசாயக் காணிகள் நீரில்   மூழ்கியதுடன், விவசாயக் காணிகளில் பயிரிடப்பட்டியிருந்த மரக்கறி வகைகள் அனைத்தும், வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதென  விவசாயிகள்  தெரிவிக்கின்றனர்.

மேலும் நுவரெலியா, கந்தப்பளை உள்ளிட்ட பல பகுதிகளிலும் விவசாயச் செய்கைகள் பாதிப்படைந்துள்ளதால், விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .