Editorial / 2025 நவம்பர் 12 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஓய, கரமட பிரதேசத்தில் புதன்கிழமை (12) பிற்பகல் 1:00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், கரமட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தக்ஷிலா ரத்நாயக்க (வயது 35) அவர் கடையில் இருந்தபோது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த ஒரு தனியார் பஸ்ஸே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பஸ் முதலில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கரவண்டியுடன் பலமாக மோதி, அதனைத் தொடர்ந்து ஒரு வீட்டிற்குச் சேதம் விளைவித்துவிட்டு, இறுதியாக கடைக்குள் புகுந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும், உயிரிழந்த தாயின் ஆறு வயது மகளும் மேலதிக சிகிச்சைக்காகப் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்ஸின் சாரதியை பேராதனைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பேராதனை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.ஏ.அமீனுல்லா
43 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
3 hours ago