Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 17 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலை வளாகத்துக்குள் திரியும் கட்டாக்காலி நாய்களால், வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் அவர்களைப் பார்வையிட வருபவர்களும் அசௌகரியத்துக்கு உள்ளாகின்றனர்.
வைத்தியசாலை வளாகத்தின் ஒரு பகுதிக்குள் அதிகமான கட்டாக்காலி நாய்கள் திரிவதாகவும் இதனால் வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த நாய்கள் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலுள்ள ஆசனங்களில் படுத்திருப்பதால், வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் உறுப்பினர் சசி ரத்னாயக்க கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு வைத்தியசாலை வளாகத்தில் கட்டாக்காலி நாய்கள் திரிவதை தானும் அவதானித்ததாகவும் இது தொடர்பில் நகர சபையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .