2026 மே 14, வியாழக்கிழமை

கணக்கப்பிள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஆ.ரமேஸ்   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்புஸ்ஸல்லாவை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கந்தப்பளை பாக்கு தோட்டத்தில் பணியாற்றும் கணக்கப்பிள்ளைக்கு எதிராக, அத்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், இன்று (03) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர், தொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பெண் தொழிலாளர்களை, தரங்குறைவாக பேசியதாகத் தெரிவித்தே, தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும்  தெரியவருவதாவது, பாக்கு தோட்டத்தில், பெண் தொழிலாளர்களுக்கு மாலை 3.45 மணிக்கு வேலை விடுவது வழக்கம். இந்த நிலையில்(2)ஆம் திகதி தோட்ட கணக்குபிள்ளை, வழமையை மீறி மாலை 4.45 மணிவரை பெண் தொழிலாளர்களை, முத்திய தேயிலை இலைகளைப் பிரித்தெடுக்குமாறு கோரி, கடமையில் ஈடுப்படுத்தியுள்ளார்.

இதனால், தமது குழந்தைகளை பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் விட்டு வந்தத் பெண் தொழிலாளர்கள், கர்ப்பிணிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கணக்குபிள்ளையின் செயலைத் தட்டிக்கேட்ட தொழிலாளர்களை "தொழிலை பாருங்கள் நாய்களே”  என தூற்றியதாகத் தெரியவருகிறது.

இவ்விடயம் தொடர்பில், பாதிக்கப்பட்டத் தொழிலாளர்கள் தோட்டக்கமிட்டியின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதுடன், பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் கணக்கப்பிள்ளைக்கு எதிராக தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை தோட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரி, தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுளள்னர்.

சம்பவத்தை அறிந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க பிரதநிதிகளான மாவட்டத் தலைவர் கே. ஜெயராம், தொழிலுறவு அதிகாரி எம்.பதமநாதன், பிரதேச சபை உறுப்பினர் எம்.ராமஜெயம்  ஆகியோர், பாக்கு தோட்டத்துக்கு சென்று  தோட்ட அதிகாரியுடன்   பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

எதிர்வரும் பத்து நாள்களில் கணக்குபிள்ளையை இடமாற்றம் செய்வதாகவும் அதுவரை அவரை பணிநீக்கம் செய்வதாகவும் தோட்ட அதிகாரி உறுதி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  மாலை பணிபகிஷ்கரிப்பை நிறுத்தி கொண்ட தொழிலாளர்கள் நாளை (04) காலை முதல் தமது வழமையான பணிக்கு செல்வதாக தெரிவித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .