2025 ஜூலை 02, புதன்கிழமை

கணவன் திருடிய நகைகளை அடகுவைத்த மனைவி கைது

எம். செல்வராஜா   / 2017 நவம்பர் 14 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவனால் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்த மனைவியை, பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, மொனராகலை பிரதேசத்தில் இன்று (14) இடம்பெற்றுள்ளது.

 

குறித்த பெண்ணைக் கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்த தங்க நகைகளை அடகு வைத்த பற்றுச்சீட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இப்பெண்ணின் கணவன், கடந்த 9ஆம் திகதி வீடொன்றினை உடைத்து உட்புகுந்து, அலுமாரியை உடைத்து 62 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், பெருமளவிலான தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக மொனராகலைப் பொலிஸார், குறிப்பிட்ட நபரைக் கைது செய்திருந்தனர்.

இது குறித்து, மொனராகலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளையில், கைது செய்யப்பட்டிருக்கும் நபரின் மனைவி, தங்க நகைகள் சிலவற்றை அடகு வைப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அப்பெண்ணைக் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க நகைகள் அடகு வைக்கப்பட்ட பற்றுச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கும் கணவனும் மனைவியும், தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர், அவ்விருவரும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, மொனராகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேகித்த தேசப்பிரிய தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .