2026 மே 09, சனிக்கிழமை

கண்டி நகரில் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு முஸ்தீபு

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகப் பகுதிகளில், விலங்குகளிலிருந்து மக்களையும் பயிர்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் உயர்பீட உறுப்பினர் கே.டீ. லால்காந்த,  கண்டி நகரை மய்யமாக வைத்து, விழிப்பூட்டும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை  நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

வன விலங்குகளின் அட்டகாசம் காரணமாக, மலையப் பகுதிகளில், பயிர்ச்செய்கைகள் பாதிப்படைவதுடன்  மக்களின் பொருளாதாரமும் கேள்விக்குறியாவதாகத் தெரிவித்தார்.

இது விவசாயிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். பன்றி, குரங்கு முள்ளம்பன்றி உட்பட பல்வேறு  விலங்குகளிளால்  விவசாயச் செய்கைகள் பாதிப்படைந்து வருவதாக, அவர் மேலும் கூறினார்.

இதனைத் தடுப்பதற்கு, ஆட்சியாளர்கள் எவ்வித முயற்சிகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்றும் எனவே, தாம் அரசின் அவதானத்தை ஈர்ப்பதற்காக,  கண்டி நகரை மய்யமாக வைத்து, ஆர்ப்பாட்டம் ஒன்றையும்   விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றையும் முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .