2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டி, பதுளையிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள்

R.Maheshwary   / 2021 ஜூலை 26 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

ஹட்டனில் அமையப்பெற்றுள்ள தொண்டமான் தொழில்பயிற்சி நிலையம் போன்று கண்டி,பதுளை ஆகிய பிரதேசங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்காக தனது அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், குடும்ப வறுமையால் பாடசாலைகளிலிருந்து இடைநடுவே விலகும் மாணவர்கள் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிச்சி நிலையத்தின் ஊடாக தொழில்சார் கற்கை நெறிகளை இலவசமாகக் கற்று, தொழில் வாய்ப்புகளையும் சுயத்தொழில்களையும் மேற்கொள்ள முடியும் என்றார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் , இன்று (26) கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் வலப்பனை,கொத்மலை,ஹங்குராகெத்த ஆகிய பிரதேசங்களிளும் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தால் கட்டப்பட்ட வீடமைப்பு திட்டங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதி குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்பதாக மக்களிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .