Kogilavani / 2020 நவம்பர் 30 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன்செனவிரத்ன
கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று (30) பதிவானது.
கண்டி, கலஹாவைச் சேர்ந்த 49 வயது நபர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அவர் இன்று (30) அனுமதிக்கப்படும்போதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அவர் கொழும்பு கொலன்னாவ பிரதேசத்திலுள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார் என்றும் இந்நிலையிலேயே திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 408 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026