2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கண்டி விபத்தில் தந்தையும் மகனும் பலி

Editorial   / 2023 மே 17 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டி தர்மராஜ வித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் பாதசாரி கடவையைக் கடந்துகொண்டிருந்த தந்தை, மகன் மீது வாகனம் மோதியதில் அவ்விருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் செலுத்திச் சென்ற வாகனமே இவ்விருவர் மீதும் மோதுண்டுள்ளது. .

இவ்விருவரும் செவ்வாய்க்கிழமை (16) இரவு 8 மணியளவில், பாதசாரி கடவையை கடந்துகொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கண்டியில் உள்ள தனியார் நிறுவமொன்றில் பணியாற்றும் கண்டி பூவெலிகடையைச் ​சேர்ந்த சம்பத் ரொட்றிகோ( வயது 42) மற்றும் கண்டி டி.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்தில் பயிலும் அவருடைய மகன் விமந்த ரொட்றிகோ (வயது 10) ஆகிய இருவருமே மரணமடைந்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்துள்ள கண்டி பொலிஸார், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X