2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டிக்கு எப்படி போவது

Editorial   / 2021 நவம்பர் 11 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-கண்டி வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி   12ஆம் திகதி (நாளை) காலை 9.00 மணி வரை மூடப்படும்.

கொழும்பு கண்டி வீதியில் 98வது கிலோமீற்றர் கீழ் கடுகன்னாவ வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் களப்பரிசோதனை செய்து வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, போக்குரவரத்து  தடையை  தடுப்பதற்கு பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும் .அதற்குத்  தேவையான வழிகாட்டல்களை இலங்கை பொலிஸாரும்  வீதி அபிவிருத்தி அதிகார சபையும்  வழங்கி வருகிறது.

கொழும்பில் இருந்து கண்டிக்கு வரும்  வாகனங்களுக்கு  மாற்று வீதிகள்

1. அம்பேபுஸ்ஸ ஊடாக குருநாகல் வந்து, கடுகஸ்தோட்டை ஊடாக கலகெதர - கண்டி.

2. கேகாலையில் இருந்து பொல்கஹவெல-குருநாகல், கலகெதர கடுகஸ்தொட்டை வழியாக கண்டி.

3. மாவனல்லையில் இருந்து ரம்புக்கனை - ஹதரலியத்த - கலகெதர, கடுகஸ்தோட்டை ஊடாக கண்டி.

4. மாவனல்லையில் இருந்து ஹெம்மாதகம கம்பளை வரை - பேராதனை கண்டி

 ஆகிய வீதிகளை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு மாற்று வீதிகள்

1. கட்டுகஸ்தொட்டை கலகெதர – குருநாகல்- கொழும்பு வரை

2. கட்டுகஸ்தோட்டை - கலகெதர - ரம்புக்கன வந்து கொழும்பு கண்டி பிரதான வீதி வழியாக  கொழும்புக்கு

ஆகிய வீதிகளை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் மேலும் தெரிவித்தார்

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .