2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கண்டியில் ”கடவுச்சீட்டு” மோசடி: மூவர் சிக்கினர்

Editorial   / 2022 ஜூலை 11 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கண்டி கிளை ஊடாக, வெளிநாட்டு கடவுச் சீட்டுகளைப் பெற வரும் இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 ஒருநாள் மற்றும் சாதாரண விநியாகத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி 6,000 தொடக்கம் 50,000 ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட குறித்த அலுவலகத்தின்  பணியாளர் ஒருவரும் மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருநாள் மற்றும் சாதாரண சேவையாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் கண்டி அலுவலகம் ஊடாக விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு  கடவுச்சீட்டுகளை பெற்றுவதற்காக வருவோரிடம் முன்கூட்டியே பெற்றுத்தருவதாகக் கூறி சந்தேகநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, ஒரு நாள் சேவைக்காக 40,000 தொடக்கம் 50,000 வரை சந்தேகநபர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹியத்தகண்டியிலிருந்து கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு வருகைத் தந்த இளைஞர் ஒருவரிடம் 25,000 ரூபாய் முற்பணம் பெற்றுக்கொண்ட போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் குறித்த குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்றும் இளைஞரும் ஓட்டோ சாரதியொருவரும் மாத்தளையைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை முதலில் இளைஞர்கள் சிலரே பிடித்துள்ள நிலையில், அவர்களை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், அங்கிருந்த அதிகாரிகள் விடுவிக்க நடவடிக்கை எடுத்த போது, அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்தே சந்தேகநபர்கள் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X