2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கண்டியில் கிளை திறந்து வைப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

தங்களுடைய சேவைகளை மலையக மக்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் டிரான்ஸ் பேரன்சி இன்டர்நேசனல் நிறுவனத்தின் கிளைக்காரியாலயம்   24.04.2023 அன்று திங்கட்கிழமை கண்டியில் திறந்து வைக்கப்பட்டது.

ஊழலற்ற நாட்டை உருவாக்குவோம் தகவல் அறியும் சட்டத்தை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டுவருகின்ற டிரான்ஸ் பேரன்சி இன்டர்நேசனல் நிறுவனமானது கடந்த பல வருடங்களாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றது.

கொழும்பை தலைமையகமாகவும் பல மாவட்டங்களிலும் தங்களுடைய கிளைக்காரியாலயங்களை அமைத்தும் செயற்பட்டு வருகின்ற மேற்படி நிறுவனமானது ஊழல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வருகின்றது.

மேலும் தகவல் அறியும் சட்டமூலத்தை நாடு முழுவதும் அனைத்த தரப்பினரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அது தொடர்பான செயலமர்வுகளையும் பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது.

 தங்களுடைய தேவைகளுக்கு நேரில் சென்று அல்லது அவசர தொலைபேசி இலக்கமான 0112-866777 எனும் என்னுடன் தொடர்பு கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .