2025 மே 12, திங்கட்கிழமை

கண்டியில் பழைய சடலம் மீட்பு

Editorial   / 2023 ஜூலை 25 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுஹம்பொல பிரதேசத்தில் அறையொன்றில் தனியாக வசிந்துவந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் அவருடைய சடலம், செவ்வாய்க்கிழமை (25) மீட்கப்பட்டுள்ளது.

​திருமணமாகாத 52 வயதான பெண்​ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி பைரவகந்த பிரதேசத்தில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்து ஹோட்டல் வேலையை செய்துவந்த இந்தப் பெண், சில வருடங்களுக்கு முன்னர் சுதுஹம்பொல பிரதேசத்துக்கு வந்து, அங்குள்ள காணியில் தற்காலிக வீடொன்றை நிர்மாணித்து தனியாக வசித்து வந்துள்ளார் என பொலிஸார் ​தெரிவித்தனர்.

அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் பிரகாரம் அங்குச் சென்ற போதே, பெண்ணொருவர் இறந்திருப்பது கண்டறியப்பட்டது.

இந்தப் பெண் ஐந்து நாட்களுக்கு முன்னர் மரணமடைந்து இருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார் மரண பரிசோதனைக்காக சடலத்தை கண்டி தேசிய வைத்தியசாலையில் விசேட நீதிமன்ற வைத்தியரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X