2025 மே 12, திங்கட்கிழமை

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

Editorial   / 2025 மே 11 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே ஞாயிறுக்கிழமை (11) அதிகாலை 4.00 மணியளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் கம்பளை, பேராதனை மற்றும் நுவரெலியா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X