2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்கான வர்த்தகர் மரணம்

Janu   / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா பிரதான நகரில் கடந்த திங்கட்கிழமை (07) காலை இடம்பெற்ற வாக்குவாதத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்து  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் புதன்கிழமை (  09 ) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் வர்த்தக நிலையத்தின் வாடகை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதலால் இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வர்த்தகர் நுவரெலியா மாவட்ட வைத்திசாலையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் பல இடங்களில் கத்திக்குத்து ஆழமாக  பதிந்திருந்ததால் அதிகளவு குருதி வெளியேறியுள்ளதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 53 வயதுடைய கருப்பையா ராமசுந்தரம் நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் எனவும் , இவர்கள் இருவரும் தானாகவே நானுஓயா நிலையத்தில் சரணடைந்தமையும் குறிப்பிடத்தக்கது .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டி.சந்ரு செ.திவாகரன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X